குருவிரொட்டி இணைய இதழ்

நன்றி மறப்பது நன்றுஅன்று – குறள்: 108


நன்றி மறப்பது நன்றுஅன்று நன்றுஅல்லது
அன்றே மறப்பது நன்று.
– குறள்: 108

– அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம்



கலைஞர் உரை

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவர் செய்த நன்மையை மறப்பது அறனன்று; அவர் செய்த தீமையை அன்றே மறப்பது அறனாவது.



மு. வரதராசனார் உரை

ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.



G.U. Pope’s Translation

‘Tis never good to let the thought of good things done thee pass away;
Of things not good, ’tis good to rid thy memory that very day.

 – Thirukkural: 108,The Knowledge of Benefits Conferred : Gratitude, Virtues