நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். – குறள்: 138
– அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம்
கலைஞர் உரை
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும்.
தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.
ஞா. தேவநேயப் பாவாணர்
ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந்தரும், தீயவொழுக்கம் எக்காலும் துன்பமே தரும்.
மு. வரதராசனார் உரை
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.