நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையர்
நெஞ்சத்து அவலம் இலர். – குறள்: 1072
– அதிகாரம்: கயமை, பால்: பொருள்
கலைஞர் உரை
எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக்
கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப் படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தமக்கும் பிறர்க்கும் நன்மையானவற்றை யறியும் மேன்மக்களினும் அவற்றை யறியாத கீழ்மக்கள் பேறுபெற்றவராவர்; எங்ஙனமெனின் அவை பற்றி அவர்போலத் தம் நெஞ்சத்திற் கவலைப்பட்டுவருந்துவதில்லை.
மு. வரதராசனார் உரை
நன்மை அறிந்தவரைவிடக் கயவரே நல்ல பேறு உடையவர்; ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.
G.U. Pope’s Translation
Than those of greatful heart the base must luckier be, Their minds from every anxious thought are free!
– Thirukkural: 1072, Baseness, Wealth