குருவிரொட்டி இணைய இதழ்

நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே – குறள்: 715


நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.
– குறள்: 715

– அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல்
பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த
நலனாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறிவால் தம்மினும் மிக்கோ ரவையின்கண் அவரினும் முற்பட்டு ஒன்றைச் சொல்லாதிருக்கும் அடக்கம்; அவையிற் பேசுவார்க்கு நல்லதென்று சொல்லப்பட்ட குணங்களெல்லாவற்றுள்ளும் நல்லதே.



மு. வரதராசனார் உரை

அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும் நல்லது.



G.U. Pope’s Translation

Midst all good things the best is modest grace, That speaks not first before the elders’ face.

 – Thirukkural: 715, The Knowledge of the Council Chamber, Wealth