குருவிரொட்டி இணைய இதழ்

நாண்வேலி கொள்ளாது மன்னோ – குறள்: 1016


நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
– குறள்: 1016

– அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

பரந்த இந்த உலகில் எந்தப் பாதுகாப்பையும்விட, நாணம் எனும்
வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக்
கொள்வார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உயர்ந்தோர்; தமக்குப் பாதுகாப்பாகிய நாணினைக் கொள்வதன்றி; பரந்த ஞாலத்தைக் கைப்பற்ற விரும்பார்.



மு. வரதராசனார் உரை

நாணமாகிய வேலியைத் தமக்குக் காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கையை விரும்பி மேற்கொள்ளமாட்டார்.



G.U. Pope’s Translation

Unless the hedge of shame inviolate remain,
For men of lofty soul the earth’s vast realms no charms retain.

 – Thirukkural: 1016, Shame, Wealth