நட்டார் குறைமுடியார் நன்றுஆற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர். – குறள்: 908
– அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள்.
கலைஞர் உரை
ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து
நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்;
நற்பணிகளையும் ஆற்றிடமாட்டார்கள்.
.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தாம் விரும்பிய வாறன்றி அழகிய நெற்றியையுடைய தம் மனைவி விரும்பிய வாறே நடப்பவர்;தம் நண்பருக்குத் தேவையானவற்றைச் செய்து தீர்க்க மாட்டார்; அதோடு மறுமைக்குத் தமக்குத் துணையான அறமுஞ் செய்ய மாட்டார்.
மு. வரதராசனார் உரை
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தம்முடைய நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்கமாட்டார்; அறத்தையும் செய்யமாட்டார்.
G.U. Pope’s Translation
Who to the will of her with beauteous brow their lives conform,
Aid not their friends in need, nor acts of charity perform.
– Thirukkural: 908, Being led by Women, Wealth.