குருவிரொட்டி இணைய இதழ்

நட்டார்போல் நல்லவை சொல்லினும் – குறள்: 826


நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
– குறள்: 826

– அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள்



கலைஞர் உரை

பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும், அந்தச்
சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உண்மை நண்பர்போல் நன்மை பயக்கக் கூடியவற்றைச் சொன்னாரேனும்; பகைவர் சொற்கள் நன்மை பயவாமை விரைந்து அறியப்படும்.



மு. வரதராசனார் உரை

நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்ன போதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரையில் உணரப்படும்..



G.U. Pope’s Translation

Though many goodly words they speak in friendly tone, The words of foes will speedily be known.

Thirukkural: 826, Unreal Friendship, Wealth