நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். – குறள்: 97
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்.
விளக்கம்:
நன்மையான பயனைத் தரக்கூடிய, நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.