நயனொடு நன்றி புரிந்தபயன் உடையார்
பண்புபா ராட்டும் உலகு. – குறள்: 994
– அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள்
கலைஞர் உரை
நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப்
பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நேர்பாட்டையும் (நீதியையும்) நல்வினையையும் விரும்புதலாற் பிறர்க்குப் பயன்படும் நல்லோர் பண்பை; உலகத்தார் போற்றிப் புகழ்வர்.
மு. வரதராசனார் உரை
நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன் பட வாழும் பெரியோரின் நல்ல பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.
G.U. Pope’s Translation
Of men of fruitful life, who kindly benefits dispense, The world unites to praise the ‘noble excellence’
– Thirukkural: 994, Perfectness, Wealth
Be the first to comment