நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்புஇல்சொல் பல்லா ரகத்து. – குறள்: 194
விளக்கம்:
பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையைக் கெடுக்கும்.
ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்வான்சுதை வண்ணம் கொளல். – குறள்: 714 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன்விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்புபோல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா. – குறள்: 366 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் விளக்கம்: ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்சீறின் சிறுகும் திரு. – குறள்: 568 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்ய வேண்டிய [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment