நிறைமொழி மாந்தர் பெருமை – குறள்: 28

நிறைமொழி மாந்தர் பெருமை
தமிழ் அறிஞர் முதுமுனைவர். இரா. இளங்குமரனார்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
. – குறள்: 28

– அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம்



கலைஞர் உரை

சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து
நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நிறைமொழி மாந்தர் பெருமை – பயன் நிறைந்த சொற்களையுடைய துறவியரின் பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் – நிலவுலகத்தில் அவர் கட்டளையாகச் சொல்லப்பெறும் மந்திரங்களே கண்கூடாகக் காட்டிவிடும்.



மு. வரதராசனார் உரை

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.



G.U. Pope’s Translation

The might of men whose word is never vain,
The ‘Secret word’ shall to the earth proclaim.

 – Thirukkural: 28, The Greatness of Ascetics, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.