நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாஆம் இன்னா செயின். – குறள்: 881
– அதிகாரம்: உட்பகை, பால்: பொருள்.
கலைஞர் உரை
இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக்
கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும்.
அதுபோலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மக்கள் இன்பமாக நுகரும் நிழலும் நீரும் பின்பு நோய் செய்வனவாயின் தீயனவேயாம்; அதுபோலத் தமக்குத்துணையாயிருக்க வேண்டிய தம்மைச் சேர்ந்தவர் இயல்புகளும் நன்மை செய்வனபோல் தோன்றித் தீமை செய்யின் தீயனவே யாம்.
மு. வரதராசனார் உரை
இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும்; அதுபோலவே, சுற்றத்தாரின் தன்மைகளும் துன்பம் தருமானால் தீயனவே ஆகும்.
G.U. Pope’s Translation
Water and shade, if they unwholesome prove, will bring you pain; And qualities of friends, who treacherous act, will be your bane.
– Thirukkural: 881, Enmity Within, Wealth.
Be the first to comment