குருவிரொட்டி இணைய இதழ்

நோய்நாடி நோய்முதல் நாடி – குறள்: 948


நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
குறள்: 948

– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்



கலைஞர் உரை

நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன?  நோய் தீர்க்கும் வழி
என்ன?  இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்யவேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மருத்துவன் நோயாளியின் சொல்லினாலும் நாடியினாலும் பிற உடற்குறிகளாலும் சிறுநீர் கழிபொருள்களின் இயல்பினாலும் நோய் இன்னதென்று ஆய்ந்து துணிந்து; பின்பு அது உண்டான கரணியத்தை ஆராய்ந்தறிந்து; அதன்பின் அந்நோயைப் படிப்படியாக நீக்கும் வழியை ஆய்ந்துகொண்டு, அது வெற்றியாக நிறைவேறுமாறு கையாள்க.



மு. வரதராசனார் உரை

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்யவேண்டும்.



G.U. Pope’s Translation

Disease, its cause, what may abate the ill;
Let leech examine these, then use his skill.

– Thirukkural: 948, Medicine, Wealth