நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது. – குறள்: 419
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
ஒழுக்குஆறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்துஅழுக்காறு இலாத இயல்பு. – குறள்: 161 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் நெஞ்சத்திற் பொறாமை யில்லாத தன்மையை; [ மேலும் படிக்க …]
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்கஅல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. – குறள்: 798 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போதுவிலகிவிடக் கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்க்காமலே இருந்து விட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் ஊக்கங் [ மேலும் படிக்க …]
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. – குறள்: 5 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment