குருவிரொட்டி இணைய இதழ்

நுண்மாண் நுழைபுலம் இல்லான் – குறள்: 407


நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று. – குறள்: 407

அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நுண்ணிதாய் மாட்சிமைப்பட்டுப் பல நூல்களையும் நுணுகிக் கற்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும்; சுண்ணச் சாந்தினால் மாட்சிமைப்படப் புனைந்தமைத்த படிமையின் எழுச்சியும் அழகும் போலும்.



மு. வரதராசனார் உரை

நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு, மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.



G.U. Pope’s Translation

Who lack the power of subtle, large and penetrating sense, Like puppet, decked with ornaments of clay, their beauty’s vain pretence.

 – Thirukkural: 407, Ignorance, Wealth