ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல். – குறள்: 971
– அதிகாரம்: பெருமை, பால்: பொருள்.
கலைஞர் உரை
ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமே யாகும். ஊக்கமின்றி
உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவனைச் சிறப்பித்து அவன் பெயரை விளங்கச் செய்யும் பெருமை, பிறராற் செயற்கரிய செய்வேம் என்னும் ஊக்க மிகுதியால் ஏற்படுவதே; ஒருவனுக்கு இழிவாவது, அவ்வருஞ்செயலும் அதற்கேதுவான ஊக்கமுமின்றி எளிதாய் வாழக்கடவோம் என்றெண்ணுவதே.
மு. வரதராசனார் உரை
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும்; ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலே உயிர் வாழலாம் என்று எண்ணுதலாம்.
G.U. Pope’s Translation
The light of life is mental energy; disgrace is his
Who say’s ‘I ill lead a happy life deviod of this.
– Thirukkural: 971, Greatness, Wealth.