குருவிரொட்டி இணைய இதழ்

ஒலித்தக்கால் என்ஆம் உவரி குறள்: 763


ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.
– குறள்: 763

– அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள்



கலைஞர் உரை

எலிகள் கூடி கடல்போல முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

எலியாகிய பகை பெருந்திரளாகக் கூடிக் கடல் போல் ஆரவாரித்தாலும் பாம்பிற்கு என்ன தீங்கு நேரும்!;அப்பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே அப்பகை ஒருங்கே அழிந்துபோம்.



மு. வரதராசனார் உரை

எலியாகிய பகை கூடிக் கடல்போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்படும்? பாம்பு மூச்சு விட்ட அளவில் அவை கெட்டழியும்.



G.U. Pope’s Translation

Though, like the sea, the angry mice send forth their battle cry;
What then? The dragon breathes upon them, and they die!

 – Thirukkural: 763, The Excellence of an Army, Wealth