ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார் சோர விடல். – குறள்: 818
– அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள்
கலைஞர் உரை
நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விடவேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஆகும் செயலையும் ஆகாததாக்கிக் கெடுப்பவரின் நட்பை; அவருக்குச் சொல்லாமலே மெல்ல மெல்லத் தளரவிடுக.
மு. வரதராசனார் உரை
முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் சொல்லாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.
G.U. Pope’s Translation
Those men who make a grievous toil of what they do On your behalf, their friendship silently eschew.
– Thirukkural: 818, Evil Friendship, Wealth
Be the first to comment