ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே – குறள்: 33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.
– குறள்: 33

– அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்



கலைஞர் உரை

செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறமாகிய நல்வினையை தத்தமக்கு இயன்றவாறு, அது நடை பெறக் கூடிய வழியெல்லாம் இடைவிடாது செய்க.



மு. வரதராசனார் உரை

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.



G.U. Pope’s Translation

To finish virtue’s work with ceaseless effort strive,
What way thou may’st where’er thou see’st the work may thrive.

 – Thirukkural: 33, Assertion of the strength of virtue, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.