குருவிரொட்டி இணைய இதழ்

ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே – குறள்: 673


ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
– குறள்: 673

– அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இயலுமிட மெல்லாம் போரால் வினைசெய்தல் நல்லதே; அது இயலாவிடத்து ஏனை மூன்று ஆம்புடைகளுள்ளும் ஒன்றும் பலவும் ஏற்ற வற்றை எண்ணிச் செய்க.



மு. வரதராசனார் உரை

இயலுமிடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது; இயலவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்யவேண்டும்.



G.U. Pope’s Translation

When way is clear, prompt let your action be;
When not, watch till some open path you see.

 – Thirukkural: 673, The Method of Acting, Wealth