ஒல்வது அறிவது அறிந்துஅதன் – குறள்: 472

Thiruvalluvar

ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்
. – குறள்: 472

அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம்மாற் செய்தற்கியலும் வினையையும் அதன் தொடர்பாக அறியவேண்டிய தெல்லாவற்றையும் அறிந்து ; அம்முயற்சியில் உறுதியாக மனத்தையூன்றிப் பகைமேற்செல்லும் அரசர்க்கு ; முடியாதது ஒன்றும் இல்லை .



மு. வரதராசனார் உரை

தனக்குப் பொருந்தும் செயலையும், அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை.



G.U. Pope’s Translation

Who know what can be wrought, with knowledge of the means, on this Their mind firm set, go forth, nought goes with them amiss.

 – Thirukkural: 472,The Knowledge of Power, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.