ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்
பொன்றாது நிற்பதுஒன்று இல். – குறள்: 233
– அதிகாரம்: புகழ், பால்: அறம்
கலைஞர் உரை
ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்-தனக்கு இணையில்லாவாறு உயர்ந்த புகழல்லாமல்; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்- இவ்வுலகத்து அழியாது நிற்பது வேறொன்றும் இல்லை.
மு. வரதராசனார் உரை
உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.
G.U. Pope’s Translation
Save praise alone that soars on high,
Nought lives on earth that shall not die.
– Thirukkural: 233, Renown, Virtues