
ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது. – குறள்: 886
– அதிகாரம்: உட்பகை, பால்: பொருள்.
கலைஞர் உரை
ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.
.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தனக்கு உள்ளானவரிடத்திலேயே பகைமை தோன்றுமாயின்;ஒருவனுக்கு இறவாமை கூடுதல் எக்காலத்திலும் அரிதாம்.
மு. வரதராசனார் உரை
ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.
G.U. Pope’s Translation
If discord finds a place midst those who dwelt at one before, ‘Tis ever hard to keep destruction from the door.
– Thirukkural: 886, Enmity Within, Wealth.
Be the first to comment