ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு – குறள்: 760

Thiruvalluvar

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
– குறள்: 760

– அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில்
பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நல்வழியில் வரும் செல்வத்தை நிரம்ப ஈட்டியவர்க்கு; அதனொடு சேர்த்தெண்ணப் பெறும் மற்ற இரு பொருள்களாகிய அறமும் இன்பமும் ஒரு சேர எளிதாய்க் கிட்டும்.



மு. வரதராசனார் உரை

சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒருசேரக் கை கூடும் எளிய பொருளாகும்.



G.U. Pope’s Translation

Who plenteous store of glorious wealth have gained;
By them the other two are easily obtained.

 – Thirukkural: 760, Way of Accumulating Wealth, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.