குருவிரொட்டி இணைய இதழ்

ஊக்கம் உடையான் ஒடுக்கம் – குறள்: 486


ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து.
– குறள்: 486

அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வலிமிகுந்த அரசன் ஊக்க முள்ளவனாயினும் பகைமேற் செல்லாது காலம் பார்த்து ஒடுங்கியிருக்கின்ற இருப்பு ; சண்டையிடும் செம்மறிக்கடா தன்பகையை வலிமையாய்த் தாக்குதற்குப் பின் வாங்கும் தன்மையது.



மு. வரதராசனார் உரை

ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல், போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்னே கால்வாங்குதலைப் போன்றது.



G.U. Pope’s Translation

The men of mighty power their hidden energies repress, As fighting ram recoils to rush on foe with heavier stress.

 – Thirukkural: 486, Knowing the fitting time, Wealth