ஊனைக் குறித்த உயிர்எல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு. – குறள்: 1013
– அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள்
கலைஞர் உரை
உடலுடன் இணைந்தே உயிர் இருப்பதுபோல், மாண்பு என்பது நாண
உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
எல்லா வுயிர்களும் உடம்பைத் தமக்கு நிலைக்களமாகக் கொண்டு அதனைப்பற்றும்; அதுபோலச் சான்றாண்மை நாண் என்னும் நற்குணத்தைத் தனக்கு நிலைக்களமாகக் கொண்டு அதனைப் பற்றும்.
மு. வரதராசனார் உரை
எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை; சால்பு என்பது, நாணம் என்று சொல்லபடும் நல்ல தன்மையை இருப்பிடமாகக் கொண்டது.
G.U. Pope’s Translation
All spirits homes of flesh as habitation claim,
And perfect virtue ever dwells with shame.
– Thirukkural: 1013, Shame, Wealth
Be the first to comment