ஊழையும் உப்பக்கம் காண்பர் – குறள்: 620

ஊழையும் உப்பக்கம் காண்பர்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித் தாழாது உஞற்று பவர். – குறள்: 620

– அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

“ஊழ்” என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தளர்ச்சியின்றித் தாழ்வற விடாது முயல்பவர்; வெல்வதற்கரிய ஊழையும் வென்றுவிடுவர்.



மு. வரதராசனார் உரை

சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர், (செயலுக்கு இடையூறாக வரும்) ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.



G.U. Pope’s Translation

Who strive with undismayed , unfaltering mind.
At length shall leave opposing fate behind.

 – Thirukkural: 620, Manly Effort, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.