ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார். – குறள்: 989
– அதிகாரம்: சான்றாண்மை, பால்: பொருள்
கலைஞர் உரை
தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம்புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சால்பு என்னும் கடலிற்குக் கரையாகச் சொல்லப்படுவார், ஊழிமுடிந்து உவர்க்கடல் கரைகடப்பினும், தாம் தம் சால்பெல்லை கடவார்.
மு. வரதராசனார் உரை
சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப் படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.
G.U. Pope’s Translation
Call them of perfect virtue’s sea the shore,
Who, though the fates should fail, fail not for evermore.
Thirukkural: 989, Perfectness, Wealth
Very nice.
Thanks please