ஒருமை மகளிரே போல பெருமையும்
தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு. – குறள்: 974
– அதிகாரம்: பெருமை, பால்: பொருள்.
கலைஞர் உரை
தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு
வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.
.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒரே கணவனைக் காதலித்துத் தம் கற்பைக் காத்துக் கொள்ளும் குல மகளிர் போல; ஓர் ஆடவனும் ஒரே மனைவியைக்,காதலித்து தன் கற்பைக் காத்துக் கொண்ட போதே; பெருமைக் குணமும் அவனிடத்தில் உளதாகும்.
மு. வரதராசனார் உரை
ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப் போல், பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.
G.U. Pope’s Translation
Like single-hearted women, greatness too,
Exists while to itself is true.
– Thirukkural: 974, Greatness, Wealth.
Be the first to comment