
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. – குறள்: 337
– அதிகாரம்: நிலையாமை, பால்: அறம்
கலைஞர் உரை
ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றிய உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக்கோட்டைகள் கட்டுவார்கள்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒரு நொடிப் பொழுதேனும் தம் உடம்போடு கூடியிருத்தலை உறுதியாக அறியவியலாத மாந்தர், கோடிமட்டுமன்று அதற்கு மேலும் பல எண்ணங் கொள்வர்.
மு. வரதராசனார் உரை
அறிவில்லாதவர் ஒருவேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை; ஆனால் வீணில் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல; மிகப் பல எண்ணங்கள்.
Be the first to comment