ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப்
பேதையின் பேதையார் இல். – குறள்: 834
– அதிகாரம்: பேதைமை, பால்: பொருள்
கலைஞர் உரை
படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு
உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு
நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அடங்கியொழுகுதற் கேதுவான அறநூல்களைக் கற்று அவற்றின் பொருளையும் பயனையும் தெளிவாக அறிந்தும்; அவற்றைப் பிறர்க்கு விளங்க எடுத்துச் சொல்லியும்; தான் அவற்றின்படி அடங்கியொழுகாத பேதைபோல; பேதையார் உலகத்தில் இல்லை.
மு. வரதராசனார் உரை
நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாத பேதைபோல் வேறு பேதையர் இல்லை.
G.U. Pope’s Translation
The sacred law he reads and learns, to other men expounds,- Himself obeys not: where can greater fool be found?
– Thirukkural: 834, Folly, Wealth