ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும்
தெற்றென்க மன்னவன் கண். – குறள்: 581
– அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள்
கலைஞர் உரை
நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒற்றும் புகழமைந்த அரசியல் நூலும் ஆகிய இவ்விரண்டையும்; அரசன் தன் இரு கண்களாகத் தெளிக.
மு. வரதராசனார் உரை
ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளிய வேண்டும்.
G.U. Pope’s Translation
These two: the code renowned, and spies,
In these let king confide as eyes.
– Thirukkural: 581, Detectives, Wealth
Be the first to comment