
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். – குறள்: 133
– அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம்
கலைஞர் உரை
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக்காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாவராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நல்லொழுக்க முடைமையே உயர்குலத் தன்மையாம்; தீயொழுக்கம் தாழ்ந்த குலமாகிவிடும் .
மு. வரதராசனார் உரை
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்.
G.U. Pope’s Translation
Decorum’s true nobility on earth;
Indecorum’s issue is ignoble birth.
– Thirukkural: 133, The Possession of Decorum, Virtues
Be the first to comment