ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல் .– குறள்: 139
– அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம்
கலைஞர் உரை
தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மறந்தும் தீய சொற்களைத் தம் வாயாற் சொல்லும் சொலவுகள் ; ஒழுக்கமுடைய உயர்ந்தோர்க்கு இயலா .
மு. வரதராசனார் உரை
தீய சொற்களை தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.
G.U. Pope’s Translation
It cannot be that they who ‘strict decorum’s’ law fulfil, E’en in forgetful mood, should utter words of ill.
– Thirukkural: 139,The Possession of Decorum, Virtues