குருவிரொட்டி இணைய இதழ்

ஒழுக்குஆறாக் கொள்க ஒருவன்தன் – குறள்: 161


ஒழுக்குஆறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. – குறள்: 161

– அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம்



கலைஞர் உரை

மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் தன் நெஞ்சத்திற் பொறாமை யில்லாத தன்மையை; தனக்குரிய ஓழுக்க நெறியாகக்கொள்க.



மு. வரதராசனார் உரை

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்கநெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.



G.U. Pope’s Translation

As ‘strict decorum’s laws,that all men bind,
Let each regard unenvying grace of mind.

 – Thirukkural: 161, Not envying, Virtues