ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை – குறள்: 137

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. – குறள்: 137

– அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒழுக்கத்தினால் எல்லாரும் உயர்வடைவர் ; அவ்வொழுக் கத்தினின்று தவறுவதால் தமக்கு உரியதல்லாத பழியையும் அடைவர் .



மு. வரதராசனார் உரை

ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.



G.U. Pope’s Translation

‘Tis source of dignity when ‘true decorum’ is preserved; Who break decorum’s rules endure e’en censures undeserved.

 – Thirukkural: 137, The Possession of Decorum, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.