படிஉடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடிஉடையார்
மாண்பயன் எய்தல் அரிது. – குறள்: 606
– அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்
கலைஞர் உரை
தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும்
சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது
அரிதாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சோம்பேறிகள்; மாநிலம் முழுதுமாளும் மாபெருவேந்தரின் துணை கிட்டியவிடத்தும் ; அதனாற் சிறந்த பயனடைதல் இல்லை.
மு. வரதராசனார் உரை
நாட்டை ஆளும் தலைவருடைய உறவு தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.
G.U. Pope’s Translation
Through lords of earth unearned possessions gain,
The slothful ones no yeild of good obtain.
– Thirukkural: 606, Unsluggishness, Wealth
Be the first to comment