குருவிரொட்டி இணைய இதழ்

படுபயன் வெஃகி பழிப்படுவ – குறள்: 172


படுபயன் வெஃகி பழிப்படுவ செய்யார்
நடுவுஅன்மை நாணு பவர்.
– குறள்:172

– அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம்



கலைஞர் உரை

நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நடுவுநிலையன்மைக்கு அஞ்சி நாணுபவர்; பிறர் பொருளைக் கவர்வதனால் தமக்குண்டாகும் பயனை விரும்பிப் பழிக்கத் தக்க செயல்களைச் செய்யார்.



மு. வரதராசனார் உரை

நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.



G.U. Pope’s Translation

Through lust of gain, no deeds that retribution bring Do they, who shrink with shame from evey unjust thing.

 – Thirukkural: 172, Not Coveting, Virtues