பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று. – குறள்: 871
– அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள்.
கலைஞர் உரை
பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக் கூடாது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பகையென்று சொல்லப்படும் தீயகுணத்தை; ஒருவன் விளையாட்டிற்கேனும் விரும்பத்தக்கதாக அரசியல் நூலாற் கொள்ளப்படுவதன்று.
மு. வரதராசனார் உரை
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிரித்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.
G.U. Pope’s Translation
For Hate, that ill-conditioned thing, not e’en in jest, Let any evil longing rule your breast.
– Thirukkural: 871, Knowing the Quality of Hate, Wealth.
Be the first to comment