குருவிரொட்டி இணைய இதழ்

பகைநட்புஆம் காலம் வருங்கால் – குறள்: 830


பகைநட்புஆம் காலம் வருங்கால் முகம்நட்டு
அகம்நட்பு ஒரீஇ விடல்.
– குறள்: 830

– அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள்



கலைஞர் உரை

பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் அந்த நட்பையும் விட்டு விட வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம் பகைவர் தமக்கு நண்பரா யொழுகுங் காலம் வரின்; தாமும் அவர்போல் முகத்தால் நட்புச் செய்து அகத்தில் அதைவிட்டு நீங்கிப் பின்பு வேண்டாதபோது புறநட்பையும் விட்டு விடுக.



மு. வரதராசனார் உரை

பகைவர் நண்பராகும் காலம் வரும்போது முகத்தளவில் நட்புக்கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்தபோது அதையும் விடவேண்டும்.



G.U. Pope’s Translation

When time shall come that foes as friends appear, Then thou, to hide a hostile heart, a smiling face may’st wear.

Thirukkural: 830, Unreal Friendship, Wealth