பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாஆம் இல்இறப்பான் கண். – குறள்: 146
– அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம்
கலைஞர் உரை
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பிறன் மனைவியின் கண் நெறிகடந்து ஒழுகுபவனிடத்து; பகையும் கரிசும் அச்சமும் பழியும் ஆகிய நாற்கேடுகளும் ஒருகாலும் நீங்காவாம்.
மு. வரதராசனார் உரை
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
G.U. Pope’s Translation
Who home invades, from him pass nevermore,
Hatred and sin, fear, foul disgrace; these four.
– Thirukkural: 146, Not Coveting Another’s Wife, Virtues