பலசொல்லக் காமுறுவர் மன்றமா சுஅற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். குறள்: 649
– அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள்
கலைஞர் உரை
குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தாம் கருதியவற்றைக் குற்றமில்லாத சில சொற்களால் தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லத் தெரியாதவர், நிச்சயமாக வீணாகப் பல சொற்களால் விரித்துக் கூற விரும்புவர்.
மு. வரதராசனார் உரை
குற்றமற்றவையாகிய சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பல சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்க விரும்புவர்.