பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். – குறள்: 450
– அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள்
கலைஞர் உரை
நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அரசன் நற்குணச் செல்வரான பெரியாரொடு நட்பை விட்டு விடுதல்; தான் ஒருவனாகநின்று பலரொடு பகை கொள்வதினும் பதின்மடங்கு தீமை விளைப்பதே.
மு. வரதராசனார் உரை
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
G.U. Pope’s Translation
Than hate of many foes incurred, works greater woe Ten – fold, of worthy men the friendship to forego.
– Thirukkural: 450, Seeking the Aid of Great Men, Wealth