குருவிரொட்டி இணைய இதழ்

பண்என்ஆம் பாடற்கு இயைபுஇன்றேல் – குறள்: 573


பண்என்ஆம் பாடற்கு இயைபுஇன்றேல் கண்என்ஆம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
– குறள்: 573

– அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள்



கலைஞர் உரை

இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத
கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பாடுதற்குப் பொருத்தமில்லையெனின் பண்ணால் என்ன ஆகும் ?அதுபோலக் கண்ணோட்டமில்லாத விடத்துக் கண்ணால் என்ன பயனாம்?



மு. வரதராசனார் உரை

பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும்? அதுபோல், கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்?



G.U. Pope’s Translation

Where not accordant with the song, what use of sounding chords?
What gain of eye that no benignant light affords?

 – Thirukkural: 573, Benignity, Wealth