பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம் – குறள்: 996

Thiruvalluvar

பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
– குறள்: 996

– அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும். இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உலக நடப்பு பண்புடையாரிடத்துப் படுதலால் இடையறாது தொடர்ந்து வருகின்றது; அங்ஙனமில்லாக்கால் அது மண்ணுட் புகுந்து மறைந்து போவதாம்.



மு. வரதராசனார் உரை

பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது; அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்துபோகும்.



G.U. Pope’s Translation

The world abides; for ‘worthy’ men its weight sustain.
Were it not so , ‘t would fall to dust again.

 – Thirukkural: 996, Perfectness, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.