குருவிரொட்டி இணைய இதழ்

பணியுமாம் என்றும் பெருமை – குறள்: 978


பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
குறள்: 978

– அதிகாரம்: பெருமை, பால்: பொருள்.



கலைஞர் உரை

பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன்
பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து
கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பெருமை யுடையோர் எக்காலத்துஞ் செருக்கின்றி அடங்கியொழுகுவர்; மற்றச் சிறுமை யுடையோர் எக்காலத்துஞ் தம்மை மெச்சி உயர்வுபடுத்திக் கூறுவர்.



மு. வரதராசனார் உரை

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்; ஆனால் சிறுமையோ தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொள்ளும்



G.U. Pope’s Translation

Greatness humbly bends, but littleness always
Spreads out its plumes, and loads itself with praise.

Thirukkural: 978, Greatness, Wealth.