பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்
தேரினும் அஃதே துணை. – குறள்: 132
– அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம்
கலைஞர் உரை
எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்ததுணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்கவேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒழுக்கத்தை எவ்வகையிலும் கெடாவாறு வருந்தியும் பேணிக்காக்க; பலவகை அறங்களையும் ஆராய்ந்து அவற்றுள் இருமைக்கும் துணையாவதை எவ்வளவு கவனமாகத் தேர்ந்தாலும் , அவ்வொழுக்கமே துணையாக முடியும்.
மு. வரதராசனார் உரை
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
G.U. Pope’s Translation
Searching, duly watching, learning, – ‘decorum’ still we find
Man’s only aid; toiling, guard thou this with watchful mind.
– Thirukkural: 132, The Possession of Decorum, Virtues