குருவிரொட்டி இணைய இதழ்

பற்றி விடாஅ இடும்பைகள் – குறள்: 347


பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. – குறள்: 347

– அதிகாரம்: துறவு, பால்: அறம்



கலைஞர் உரை

பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இருவகைப் பற்றையும் இறுகப்பற்றி விடாதவரை; பிறவித் துன்பங்களும் இறுகப் பற்றி விடுவதில்லை.



மு. வரதராசனார் உரை

யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டு விடாதவரை, துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.



G.U. Pope’s Translation

Who cling to things that cling and eager clasp,
Griefs cling to them with unrelaxing grasp.

 – Thirukkural: 347, Renunciation, Virtues