குருவிரொட்டி இணைய இதழ்

பற்றுஉள்ளம் என்னும் இவறன்மை – குறள்: 438


பற்றுஉள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதுஒன்று அன்று.
– குறள்: 438

அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பொருளைச் செலவிட வேண்டிய விடத்துச் செலவிடாது தன்னுடனேயே வைத்துக் கொள்ளுமாறு, உ ள் ள த் தா ல் அதை இறுகப்பற்றும் கஞ்சத்தன்மை; பிற குற்றங்களோடு சேர்த்தெண்ணப்படாது தனியாக வைக்க வேண்டிய ஒரு குற்றமாகும்.



மு. வரதராசனார் உரை

பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்த்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.



G.U. Pope’s Translation

The greed of soul that avarice men call;
When faults are summed, is worst of all.

 – Thirukkural: 438, The Correction of Faults , Wealth