நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன்இல சொல்லாமை நன்று. – குறள்: 197
– அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம்
கலைஞர் உரை
பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சான்றோர் நயன் இல சொல்லினும் சொல்லுக – அறிவுடையோர் நேர்மையில்லாத சொற்களை என்றேனும் தப்பித் தவறிச் சொல்லினும் சொல்லுக; பயன் இல சொல்லாமை நன்று.. ஆயின் எக்கரணியத்தையிட்டும் பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருத்தலே அவர்க்கு நன்றாம்.
மு. வரதராசனார் உரை
அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; சான்றோர் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
G.U. Pope’s Translation
Let those who list speak things that no delight afford, ‘Tis good for men of worth to speak no idle word.
– Thirukkural: 197, Not Speaking Profitless Words, Virtues